/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர பள்ளத்தால் விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்
/
சாலையோர பள்ளத்தால் விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்
ADDED : மே 20, 2024 01:54 AM

ஸ்ரீபெரும்புதுார்:கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, 30க்கும் மேற்பட்ட பயணியருடன், நேற்று காலை ஆம்னி பேருந்து சென்னை வந்தது.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக, ஒருவழி சாலையாக மாற்றப்பட்ட சாலையில், எதிர் திசையில் வந்த கண்டெய்னர் லாரிக்கு வழிவிட ஒதுங்கியது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, எதிர்பாராத விதமாக சாலையோர பெரிய பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது.
ஒருவழி சாலையில் மெதுவாக சென்றதால், பேருந்தில் பயணித்த மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சுங்குவார்சத்திரம் போலீசார் பேருந்தை மீட்டு, போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

