/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆரில் 170 சாலைகள் புதுப்பிப்பு
/
ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆரில் 170 சாலைகள் புதுப்பிப்பு
ADDED : ஆக 22, 2024 12:35 AM
சோழிங்கநல்லுார், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதிகளை உள்ளடக்கிய, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 192 முதல் 200 வரை ஒன்பது வார்டுகள் உள்ளன.
இதில், பல வார்டுகளில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இந்த சாலைகளை புதுப்பிக்க, மாநகராட்சி முடிவு செய்தது.
இதன்படி, 197வது வார்டை தவிர, எட்டு வார்டுகளில், 170 தெருக்களில் உள்ள சாலைகளை புதுப்பிக்க, நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 12.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ஒவ்வொரு தெருக்களும் இடத்தை பொறுத்து, 12 முதல் 25 அடி வரை அகலம் உடையவை.
இந்த சாலை பணியை, பருவமழைக்கு முன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணி, இம்மாதம் இறுதிக்குள் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.