/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரும் 23ல் அகத்தீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழா
/
வரும் 23ல் அகத்தீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழா
ADDED : ஜூலை 08, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், ஆடி மாதத்தின் ஐந்து வார செவ்வாய்கிழமைகளில், சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.
அந்நாளில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர்.
இந்தாண்டிற்கான ஆடி செவ்வாய் திருவிழா, வரும் 23ல் துவங்கி, ஆக., 20ம் தேதி ஐந்தாவது வாரம் நிறைவடைகிறது.
இந்நாட்களில், பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருப்பதாக, அகத்தீஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.