/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழிலதிபர் கடத்தல் வழக்கு ஒருவர் கைது; இருவர் சரண்
/
தொழிலதிபர் கடத்தல் வழக்கு ஒருவர் கைது; இருவர் சரண்
தொழிலதிபர் கடத்தல் வழக்கு ஒருவர் கைது; இருவர் சரண்
தொழிலதிபர் கடத்தல் வழக்கு ஒருவர் கைது; இருவர் சரண்
ADDED : ஜூன் 01, 2024 12:39 AM
பட்டினம்பாக்கம், தொழிலதிபரை காரில் கடத்தி, 50 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்; இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ராயப்பேட்டை, பக்சி அலி தெருவைச் சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன், 33. இவர், பர்மா பஜாரில் மொபைல் போன்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஆசை வார்த்தை கூறி பழகிய இளம் பெண் ஒருவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் கடத்தி, 50 லட்சம் ரூபாய் பறித்தார்.
சம்பவம் குறித்து பட்டினம்பாக்கம் போலீசார் விசாரித்து, வேலுாரை சேர்ந்த சோனியா, 26, என்ற இளம் பெண்னை கைது செய்தனர்.
வழக்கில் தொடர்புடைய, அண்ணா சாலையை சேர்ந்த தமீம் அன்சாரி, 33, என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய அம்பத்துாரைச் சேர்ந்த சஜி, 43, மற்றும் சக்திவேல், 35, ஆகியோர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.