/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒருவர் பலி; இருவர் படுகாயம்
/
கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒருவர் பலி; இருவர் படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒருவர் பலி; இருவர் படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒருவர் பலி; இருவர் படுகாயம்
ADDED : மார் 02, 2025 12:39 AM
பொன்னேரி, பழவேற்காடு, ஜமீலாபாத் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் காசிம், 33, நிஜாமுதின், 32, அரோன், 32. மூவரும், சமையல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று, பொன்னேரி அடுத்த தேவம்பட்டு பகுதியில், சமையல் பணிக்காக சென்றனர். பணி முடிந்து, மாலை 5:00 மணிக்கு, மூவரும் 'ராயல் என்பீல்டு' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
தேவம்பட்டு - மெதுார் சாலை வழியாக, கோளூர் அருகே வந்த போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
தலைக்கவசம் அணியாத நிலையில், மூவரும் பலத்த காயமடைந்தனர். இதில், பைக் ஓட்டி வந்த அப்துல் காசிம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த நிஜாமுதின், அரோன் ஆகியோரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.