/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செயின் பறிப்பு மேலும் ஒருவர் கைது
/
செயின் பறிப்பு மேலும் ஒருவர் கைது
ADDED : மே 11, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைந்தகரை,
ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 34. இவர், ஏப்., 25ம் தேதி மாலை, நண்பர் தினேஷ் என்பவருடன், அதே பகுதியில் உள்ள காலிமனையில் மது அருந்தினார்.
அப்போது, நான்கு பேர் கும்பல், ஹரிகிருஷ்ணனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 1.5 சவரன் தங்க செயினை பறித்தனர்.
தடுக்க முயன்ற, தினேஷை மர்ம கும்பல் தாக்கி தப்பினர். இதுகுறித்து, அமைந்தகரை போலீசார் விசாரித்து, நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளியான பெரியமேடைச் சேர்ந்த மூக்கு பரத், 29, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.