ADDED : ஜூன் 22, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீனம்பாக்கம், பல்லாவரம், ஈஸ்வரன் நகர், நியூகாலனியைச் சேர்ந்தவர் சக்திவேல், 45. இவர், கடந்த 16ம் தேதி ஆலந்துாரில் இருந்து பல்லாவரம் நோக்கி 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., 50' மொபட்டில் ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தார்.
மழை பெய்த நிலையில், அதிவேகமாகச் சென்றபோது மீனம்பாக்கம் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து துாக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.