/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாகன சோதனையில் இனிமேல் இருவர் மட்டுமே ஈடுபட உத்தரவு
/
வாகன சோதனையில் இனிமேல் இருவர் மட்டுமே ஈடுபட உத்தரவு
வாகன சோதனையில் இனிமேல் இருவர் மட்டுமே ஈடுபட உத்தரவு
வாகன சோதனையில் இனிமேல் இருவர் மட்டுமே ஈடுபட உத்தரவு
ADDED : பிப் 28, 2025 12:05 AM

சென்னை,சென்னை போலீஸ் கமிஷனரகத்தின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன.
அவற்றில் பணிபுரியும் போலீசார், தினசரி தங்கள் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதோடு, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதில் மட்டுமே, போக்குவரத்து போலீசார் ஆர்வம் காட்டி வருவதாகவும், போக்குவரத்து ஒழுங்குப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, 'வாகன தணிக்கையில் இனிமேல், ஒரு உதவி ஆய்வாளர், அவருடன் ஒரு காவலரும் மட்டுமே இருக்க வேண்டும்.
மற்றவர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்' என, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.