ADDED : செப் 02, 2024 02:06 AM

சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, டி.என்.எச்.பி., காலனியில் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா அமைக்க, 3.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
டி.என்.எச்.பி., பிரதான சாலையில், 1.70 கோடி ரூபாயில், 53,000 சதுர அடி பரப்பில், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. ஸ்கேட்டிங், கைப்பந்து, கபடி, கிரிக்கெட் ஆகியவை விளையாடும் வகையில் கட்டமைக்கப்பட்டது.
அதேபோல், இ - 36வது சாலையில், 89 லட்சம் ரூபாயில், 32,000 சதுரஅடி பரப்பில், மைதானம் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது. மேலும், 1,500வது குடியிருப்பு வளாகத்தில், 88 லட்சம் ரூபாயில், 34,000 சதுர அடி பரப்பில், மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில், யோகா மேடை, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.மூன்று திட்டங்களும், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு உள்ளன.