ADDED : மே 06, 2024 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலிபுதுநகர்:தமிழகம் முழுதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், வெயிலை சமாளிக்கும் பொருட்டு, அரசியல் கட்சிகள், மாநகராட்சி ஆங்காங்கே பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தண்ணீர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.
அந்த வரிசையில், மணலிபுதுநகர், அற்புத குழந்தை இயேசு சர்ச் சார்பாக, நேற்று நுழைவு வாயில் அருகே, தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
தண்ணீர் பந்தலை, திருத்தல பங்கு தந்தை தங்ககுமார், டி.வி.எம். சேவா பாலம் நிறுவன தலைவர் இருளப்பன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பின், பொதுமக்களுக்கு, மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் பெஞ்சமின், அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.