/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கட்டுப்பாடுகள் விதிக்க எதிர்ப்பு
/
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கட்டுப்பாடுகள் விதிக்க எதிர்ப்பு
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கட்டுப்பாடுகள் விதிக்க எதிர்ப்பு
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கட்டுப்பாடுகள் விதிக்க எதிர்ப்பு
ADDED : மார் 04, 2025 08:52 PM
சென்னை:சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில், புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதற்கான திட்டத்தில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு, நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 32 கி.மீ., சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிகள், சென்னையின், 'பெல்ட் ஏரியா' என்று குறிப்பிடப்படுகிறது. இப்பகுதி புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க, கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது.
இதன்படி, சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும், 29,187 பேருக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணையை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், வருவாய்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில், பல்லாவரத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர் அமுதா, நில நிர்வாக ஆணையர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர் தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள், தாம்பரம் மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
எதிர்ப்பு
பொதுவாக, புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும்போது, அவர்களின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இது தவிர, நிலத்தின் மதிப்பு அடிப்படையில் பட்டா வழங்கும் அதிகாரமும் பல்வேறு நிலைகளாக பிரிக்கப்படுகிறது.
தற்போது, பெல்ட் ஏரியாவுக்கு பட்டா வழங்க, மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என, கூறப்படுகிறது. இதற்கு, கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு வருவாய் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதை அடுத்து, பட்டா வழங்குவதற்கான நடைமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.