/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிப்பறி செய்த அதிகாரிகளின் கூடுதல் விபரம் திரட்ட உத்தரவு
/
வழிப்பறி செய்த அதிகாரிகளின் கூடுதல் விபரம் திரட்ட உத்தரவு
வழிப்பறி செய்த அதிகாரிகளின் கூடுதல் விபரம் திரட்ட உத்தரவு
வழிப்பறி செய்த அதிகாரிகளின் கூடுதல் விபரம் திரட்ட உத்தரவு
ADDED : பிப் 27, 2025 11:58 PM
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் இருந்து, சிறப்பு சப் - -இன்ஸ்பெக்டர்கள் ராஜா சிங், சன்னிலாய்ட், வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர், கடந்தாண்டு 20 லட்சம் வழிப்பறி செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஆயிரம்விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராஜாசிங், சன்னி லாய்ட் ஆகிய இருவரும், தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி சுந்தர் மோகன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், இதே வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமின் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர், எந்த புகாரும் அளிக்காத நிலையில், வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 70 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் மேற்கண்ட இருவரும் முக்கிய நபர்கள் என்பதால், ஜாமின் வழங்கக்கூடாது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு நபரும், இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மனுதாரர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார். அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் கூடுதல் விபரங்களை, காவல் துறை திரட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.