ADDED : ஜூன் 01, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பென்னலுார் பகுதியில், 'மஞ்சு பவுண்டேஷன்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் வீடு வாங்க பி.ரேனுகா என்பவர், 20.98 லட்சம் ரூபாயை, 2015ல் செலுத்தி ஒப்பந்தம் செய்தார். காலத்தில் பணிகள் முடிக்காததால் அதிலிருந்து விலக, ரேனுகா முடிவு செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனு தொடர்பான, ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் சுனில்குமார் அமர்வு,' ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை.
எனவே, மனுதாரர் செலுத்திய, 20.98 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். அடுத்த, 30 நாட்களுக்குள் உத்தரவை அமல்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டது.