/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேல்நிலை தொட்டி குடிநீர் வீண் ஊராட்சி ஊழியர்கள் அலட்சியம்
/
மேல்நிலை தொட்டி குடிநீர் வீண் ஊராட்சி ஊழியர்கள் அலட்சியம்
மேல்நிலை தொட்டி குடிநீர் வீண் ஊராட்சி ஊழியர்கள் அலட்சியம்
மேல்நிலை தொட்டி குடிநீர் வீண் ஊராட்சி ஊழியர்கள் அலட்சியம்
ADDED : செப் 03, 2024 12:29 AM

அய்யப்பன்தாங்கல், சஊராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரம்பிய பின், குடிநீர் வீணாகும் நிலை தொடர்கிறது. சென்னை, அய்யப்பன்தாங்கல் ஊராட்சி சென்னை மாநகராட்சிக்கு மிக அருகில் உள்ளது.
இங்கு கொளுத்துவாஞ்சேரி, திருவீதியம்மன் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்த நீர்த்தேக்க தொட்டியில், மின் மோட்டார் வாயிலாக குடிநீர் நிரப்பப்பட்டு, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை நிரப்பும் ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதால், தொட்டியில் தண்ணீர் நிரம்பி, வெளியே வழிந்து குடிநீர் வீணாகும் நிலை உள்ளது.
இது அடிக்கடி நடந்து வருவதாக, பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, குடிநீரை வீணாக்காமல் பொறுப்புடன் ஊராட்சி ஊழியர்கள் செயல்பட வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.