/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை பல்கலை வழக்கில் ஐகோர்ட் வேதனை! துணை வேந்தர் தேர்வில் ஓராண்டு இழுபறி அதிகார மோதலால் மாணவர்கள் பாதிப்பு
/
சென்னை பல்கலை வழக்கில் ஐகோர்ட் வேதனை! துணை வேந்தர் தேர்வில் ஓராண்டு இழுபறி அதிகார மோதலால் மாணவர்கள் பாதிப்பு
சென்னை பல்கலை வழக்கில் ஐகோர்ட் வேதனை! துணை வேந்தர் தேர்வில் ஓராண்டு இழுபறி அதிகார மோதலால் மாணவர்கள் பாதிப்பு
சென்னை பல்கலை வழக்கில் ஐகோர்ட் வேதனை! துணை வேந்தர் தேர்வில் ஓராண்டு இழுபறி அதிகார மோதலால் மாணவர்கள் பாதிப்பு
UPDATED : ஏப் 23, 2024 11:52 PM
ADDED : ஏப் 23, 2024 11:50 PM

சென்னை, ஓராண்டாக, துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலை இயங்குகிறது என்றும், அதிகார அமைப்புகளுக்கு இடையேயான பிரச்னையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றும், சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்த மனு:
உயர் கல்வித்துறை, கடந்த செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவில், சென்னை பல்கலை துணைவேந்தர் தேர்வுக்கான தேடுதல் குழு உறுப்பினர்களை அறிவித்தது. வேந்தரின் பிரதிநிதியாக பேராசிரியர் பட்டு சத்யநாராயணா, சிண்டிகேட் பிரதிநிதியாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தீனபந்து, செனட் பிரதிநிதியாக டாக்டர் பி.ஜெகதீசன் ஆகியோர் தேடுதல் குழுவில் உள்ளனர். இதில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் பிரதிநிதி இடம் பெறவில்லை.
யு.ஜி.சி.,யின் பிரதிநிதி இல்லாமல், தன்னிச்சையாக தேடுதல் குழுவை, மாநில அரசு நியமித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் இது உள்ளது. எனவே, உயர் கல்வித்துறை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், கடந்த டிசம்பரில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில், 'தேடுதல் குழுவை தமிழக அரசு நியமிக்கும் முன், கவர்னர் ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவில், யு.ஜி.சி., பிரதிநிதி உள்ளார். கவர்னர் நியமித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து, வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. பல்கலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அவர், தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தன்னை இணைக்கக் கோரி மனுதாரர் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த வழக்கில், சென்னை பல்கலையை இணைக்கும்படியும் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், தெரிவித்தார்.
இதையடுத்து, முதல் பெஞ்ச் 'துணைவேந்தர் இல்லாமல், ஓராண்டாக, சென்னை பல்கலை இயங்குகிறது. இது, மோசமான நிலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, அதிகார அமைப்புகளுக்கு இடையேயான பிரச்னையால், மாணவர்களின் கல்வி தான் பாதிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி குறித்து, நீதிமன்றம் கவலை கொள்கிறது. அதிகார அமைப்புகளுக்கு இடையேயான பிரச்னை குறித்து அல்ல' என தெரிவித்தது. விசாரணையை, ஜூன் 5 க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
கட் டிசி செனட் கூட்டம் நடத்துவதில் தாமதம் அரசுக்கு பேராசிரியர்கள் அவசர கடிதம்
சென்னை
பல்கலையின் நிதிநிலையை ஆலோசிக்க, செனட் கூட்டத்தை தள்ளி வைக்காமல்,
விரைந்து நடத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு, பல்கலை செனட் உறுப்பினர்களான
பேராசிரியர்கள் அவசர கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை
பல்கலையின் ஒவ்வொரு நிதியாண்டு செயல்பாடுகள் மற்றும் வரும் நிதி
ஆண்டுக்கான செலவுகள், திட்டங்கள் குறித்து முடிவு செய்ய, செனட் கூட்டம்
நடத்தப்படும். பிப்ரவரி மற்றும் ஆகஸ்டில் இந்த கூட்டம் வழக்கமாக நடக்கும்.
நடப்பு
கல்வி ஆண்டில், பிப்ரவரியில் நடக்க வேண்டிய கூட்டம், துணைவேந்தர்
இல்லாததால் அமைக்கப்பட்டுள்ள 'கன்வீனர்' கமிட்டி என்ற தற்காலிக நிர்வாக
கமிட்டி மற்றும் சிண்டிகேட் துணை குழு ஒப்புதலுடன் கூட்டப்பட வேண்டும்.
இந்நிலையில்,
கடந்த பிப்ரவரியில் நடத்த வேண்டிய கூட்டத்தை மார்ச்சில் நடத்தலாம் என,
சிண்டிகேட் துணை கமிட்டி தள்ளி வைத்தது. பின், மார்ச்சிலும் நடத்தவில்லை.
இந்நிலையில், புதிய நிதி ஆண்டும் துவங்கி விட்டது. புதிய கல்வி ஆண்டு
பணிகளும் துவங்கி விட்டன.
எனவே, புதிய கல்வி ஆண்டு, நிதி ஆண்டு
பணிகளை மேற்கொள்ள, நிதி ஒதுக்கீடு மேற்கொள்வது குறித்து, செனட் கூட்டம்
நடத்தி விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
மேலும்,
சென்னை பல்கலையின் நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில், வருமான வரி பாக்கி
உள்ளதால், பல்கலையின் வங்கி கணக்குகளை சில மாதங்கள் முன், வருமான வரித்துறை
முடக்கி, பின் தற்காலிகமாக விடுவித்தது.
எனவே, நிதி பற்றாக்குறை,
நிர்வாக சிக்கல், நிதி நெருக்கடி போன்றவற்றை தீர்க்கும் வழிகளை காணவும்,
புதிய கல்வி ஆண்டு பணிகளை திட்டமிடவும், செனட் கூட்டத்தை தாமதமின்றி கூட்ட,
தமிழக உயர்கல்வித்துறை, கன்வீனர் கமிட்டி ஒருங்கிணைப்பாளராக உள்ள
உயர்கல்வித்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

