/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வலியற்ற சிகிச்சையளிக்கும் 'எபியோன்' மருத்துவமனை
/
வலியற்ற சிகிச்சையளிக்கும் 'எபியோன்' மருத்துவமனை
ADDED : செப் 06, 2024 12:45 AM
சென்னை, எழும்பூரில் உள்ள எபியோன் மருத்துவமனை, முழங்கால் மூட்டு பாதிப்பு, நரம்பு பாதிப்பு, தலைவலி, புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து வித நோய்களின் வலியை போக்க, உயரிய சிகிச்சை அளிக்கிறது. வலி நிவாரண சிகிச்சையில் 20 ஆண்டுகள் அனுபவமுள்ள எபியோன் மருத்துவமனை, இந்த சாதனைக்காக, 'இண்டியன் புக் ஆப் ரெக்கார்ட்'சில் இடம் பிடித்துள்ளது.
இம்மருத்துவமனையில், அறுவை சிகிச்சையின்றி மூட்டு வலிக்கு நிவாரணம் பெற்ற, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுதா, 42, என்பவர் கூறியதாவது:
ஏழு ஆண்டுகளாக மூட்டு மற்றும் முதுகுத்தண்டு வலியால் அவதிப்பட்டேன். உடம்பில் வலி இல்லாத பாகமே இல்லை. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இந்நிலையில், எபியோன் மருத்துவமனை பற்றி அறிந்தேன். இங்கு, எனக்கு தரப்பட்ட பிளாஸ்மா சிகிச்சையால் வலி குறைந்து, தற்போது வழக்கம் போல் நடக்க முடிகிறது. இரவில் நன்றாக உறங்குகிறேன். என் வழக்கமான வேலைகளை நானே பார்த்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.