ADDED : ஆக 06, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
தாம்பரம்: அடுக்குமாடி குடியிருப்பில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமீம் அன்சாரி, 34, தவறி விழுந்ததில் பலியானார்.
கோவிலம்பாக்கம், சுண்ணாம்புகுளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி; பெயின்டர். குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று, பெயின்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கயிற்றில் தொங்கி பெயின்ட் அடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக, கயிறு அறுந்து கீழே விழுந்தார்.
இதில் தலையில் படுகாயமடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரியவந்தது. சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
