ADDED : ஆக 28, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர், சேலையூர் அடுத்த கவுரிவாக்கத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 35; பெயின்டர். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கினார்.
மேடவாக்கம் தீயணைப்புத் துறையினர் விரைந்து, கோதண்டபாணியின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அவர் மதுபோதையில் குளித்தது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.