/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமண மண்டபத்தில் பெயின்டர் மர்ம மரணம்
/
திருமண மண்டபத்தில் பெயின்டர் மர்ம மரணம்
ADDED : மே 06, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம்:பெரும்பாக்கம் அடுத்த எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்கண்ணன், 35; பெயின்டர். பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பெயின்ட் அடிக்கும் பணிக்கு சென்றார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும், மண்டபத்தின் மாடியில் படுத்துள்ளார். மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்ததாககூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த கிஷோர்கண்ணனை, உடனிருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கிஷேர்கண்ணன், மதுபோதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.