/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை வெள்ள தடுப்பு பணிகள் ஆய்வு
/
பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை வெள்ள தடுப்பு பணிகள் ஆய்வு
பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை வெள்ள தடுப்பு பணிகள் ஆய்வு
பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை வெள்ள தடுப்பு பணிகள் ஆய்வு
ADDED : ஆக 17, 2024 12:14 AM
அதிகாரிகள் சுறுசுறுப்பு
கனமழையால் வேளச்சேரி ஏரி நிரம்புவதால், பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையில், வெள்ளம் சூழ்ந்துவிடுகிறது. ஏரி நீருடன், மழைநீரும் 4 அடிக்கு மேல் தேங்குவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதில், 200 மீட்டர் நீளத்திற்கு பணிகள் எஞ்சியுள்ளன. பணிகள் தாமதமாக நடந்து வருவதால், அக்டோபரில் துவங்கும் வடகிழக்கு பருவமழையால் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் அன்பரசன், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.
இதைதொடர்ந்து, பணிகளை விரைவுபடுத்த நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ் உத்தரவிட்டார். அதன்படி, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சத்யபிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில், பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்தனர். பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில், சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்வெர்ட் மற்றும் அதை சுற்றியுள்ள அடைப்புகளை நீக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.