/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷனில் பாமாயில், பருப்பு தட்டுப்பாடு ஊழியர்கள், இல்லத்தரசிகள் குமுறல்
/
ரேஷனில் பாமாயில், பருப்பு தட்டுப்பாடு ஊழியர்கள், இல்லத்தரசிகள் குமுறல்
ரேஷனில் பாமாயில், பருப்பு தட்டுப்பாடு ஊழியர்கள், இல்லத்தரசிகள் குமுறல்
ரேஷனில் பாமாயில், பருப்பு தட்டுப்பாடு ஊழியர்கள், இல்லத்தரசிகள் குமுறல்
ADDED : ஜூலை 06, 2024 12:33 AM
திருவொற்றியூர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ், திருவொற்றியூரில் 104 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
இவற்றில் விற்பனை செய்யப்பட்டு வந்த பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை, இரு மாதங்களாக பற்றாக்குறையாக உள்ளன.
குறிப்பாக, 900 அட்டைதாரர்கள் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு, 250 முதல் 400 எண்ணிக்கையிலே பாமாயில் பாக்கெட்டுகள் வழங்கப்படுவதால், அதை முறையாக வினியோகிக்க முடியாமல், கடை ஊழியர்களும் திண்டாடி வருகின்றனர்.
துவரம் பருப்பு கிலோ 30 ரூபாய்க்கும், பாமாயில் 1 லிட்., பாக்கெட் 25 ரூபாய்க்கும் விற்கப்படுவதால், இவற்றை வாங்க ரேஷன் கடைகளுக்கு படையெடுக்கும் பெண்கள், துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
திருவொற்றியூர் இல்லத்தரசி எஸ்.செல்வி, 41, கூறியதாவது:
ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும் பாமாயில், மாத பட்ஜெட்டில் பெரும் பயனாக இருந்து வந்தது. வெளி சந்தையில் 1 லிட்., பாமாயில், 90 முதல் 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
பருப்பின் தேவை அதிகமாக இருப்பதால், அதன் அளவை அதிகரித்து வழங்க வேண்டிய நிலையில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்பிரச்னையை தமிழக அரசு சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.