/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்
/
முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்
ADDED : மார் 25, 2024 12:28 AM

தமிழ் மாதங்களில், 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரம். எனவே, 12 கை வேலவனுக்கு, பங்குனி உத்திர திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் தெய்வ திருமணங்கள் பல நடந்துள்ளதால், இது மேலும் சிறப்புக்கொண்ட நாளாகிறது. எனவே இந்த நாளை திருமண விரத நாள் எனவும், புராணங்கள் கூறுகின்றன.
இதையொட்டி, சிவாலயங்களில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது, புனித நீராடினால் புண்ணிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிவபெருமான் பார்வதியை கரம்பிடித்ததும், ஸ்ரீலட்சுமியின் அவதார தினமும் இதே பங்குனி உத்திர நாளில் தான். ஸ்ரீமகாலட்சுமி பங்குனி உத்திர விரதமிருந்துதான், திருமாலின் மார்பில் இடம்பிடித்தாள்.
பிரம்மன் தன் நாவில், சரஸ்வதியை வைத்துக்கொண்டதும் பங்குனி உத்திர தினத்தில் தான். ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள்- ரங்கமன்னார் திருமண வைபவமும், இந்த நாளில் தான் நடந்தது.
அந்தவகையில், பங்குனி உத்திர திருவிழா நேற்று, முருகப்பெருமான் கோவில்களில் கொண்டாடப்பட்டது.
- நமது நிருபர் -

