/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூன்று இடங்களில் வெடிகுண்டு மிரட்டலால் சென்னையில் பீதி
/
மூன்று இடங்களில் வெடிகுண்டு மிரட்டலால் சென்னையில் பீதி
மூன்று இடங்களில் வெடிகுண்டு மிரட்டலால் சென்னையில் பீதி
மூன்று இடங்களில் வெடிகுண்டு மிரட்டலால் சென்னையில் பீதி
ADDED : ஜூன் 03, 2024 01:42 AM
சென்னை:சென்னை விமான நிலையம் உட்பட மூன்று இடங்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியல் கல்லுாரிக்கு, மர்ம நபர், 'இ - மெயிலில்' 'உங்கள் கல்லுாரியில் வெடிகுண்டு வைத்துள்ளோம். 2ம் தேதி அதிகாலை, 2:04க்கு வெடிக்கும்' என, கூறியுள்ளார்.
அதேபோல, அடுத்தடுத்து, சென்னை விமான நிலையம் மற்றும் பாரிமுனை ஓய்.எம்.சி.ஏ., அலுவலகத்திற்கும் 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மூன்று இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். மர்ம பொருள் ஏதும் சிக்கவில்லை.
இதனால், வதந்தி என, முடிவுக்கு வந்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மகள் பெயரையும் குறிப்பிட்டு, இந்த மெயில் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.