/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்களை படமெடுத்த மர்ம நபரால் மயிலையில் பீதி
/
பெண்களை படமெடுத்த மர்ம நபரால் மயிலையில் பீதி
ADDED : மே 16, 2024 12:44 AM
மயிலாப்பூர், மயிலாப்பூர் பகுதியில், பெண்களை வீடியோ எடுக்கும் 'காமுக' ஆசாமியால் பெண்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை, மயிலாப்பூர், அப்பு தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சில நாட்களாக மர்ம நபர் ஒருவர், அங்கு செல்லும் பெண்களை தன் மொபைல் போனில் படம் பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி காட்டுத்தீ போன்று பரவியதால், அப்பகுதி பெண்கள் அச்சமடைந்தனர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தாக தெரிகிறது. ஆனால், அந்த மர்ம நபர் தப்பினார். அவர் யார் என்ற விபரமும் தெரியவில்லை.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'தினமும் காலை, மாலை என இருமுறை ரோந்து பணி செல்கிறோம். சந்தேக நபர் யாராக இருந்தாலும் அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம்' என்றனர்.