ADDED : செப் 09, 2024 02:29 AM
வளசரவாக்கம்:வளசரவாக்கம் மண்டலம் 149வது வார்டு வளசரவாக்கத்தில், பிருந்தாவன் நகர் உள்ளது. இங்குள்ள 5 மற்றும் 6வது தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், பிருந்தாவன் நகர் 5வது தெருவைச் சேர்ந்த ஷாம் ஷீரா, 75, என்ற பெண்ணை, கடந்த 16ம் தேதி, வீட்டில் வளர்க்கப்பட்டு தெருவில் சுதந்திரமாக விடப்பட்ட நாய்கள் கடித்துள்ளன.
இதுகுறித்து வளசரவாக்கம் காவல் நிலையம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பிருந்தாவன் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பிருந்தாவன் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதில், சில வீட்டில் முறையான பாதுகாப்பின்றி 4 முதல் 5 நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த நாய்கள், பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில், தெருக்களில் சுதந்திரமாக திரிய விடப்படுகின்றன.
புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்னைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.