/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
/
பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
ADDED : ஏப் 23, 2024 11:59 PM

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக துவங்கியது.
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் 10 நாள், பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல், சேனை முதன்மையார் நிகழ்வு நடந்தது.
நேற்று காலை, 8:00 மணி முதல் 8:40 மணி வரை துவஜாரோகணம் எனும் கொடியேற்ற விழா விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
இன்று காலை 6:15 மணிக்கு சேஷ வாகனத்தில் பரமபதநாதன் திருக்கோலக் காட்சி நடக்கிறது. இரவு 7:45 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நடக்கிறது.
மூன்றாம் நாள் விழாவில் கோபுர தரிசனதுடன் கருட சேவை உற்சவம், 25ம் தேதி காலை 5:15 மணிக்கு நடக்கிறது. அன்று நண்பகல் 12:00 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7:45 மணிக்கு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நாளான, வரும் 29ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் பெருமாள் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:00 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்படுகிறது.
பல்லக்கு-வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, 30ம் தேதி காலை 6:15 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு 8:15 மணிக்கு குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது.
வரும் மே, 1ம் தேதி காலை 6:15 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும் , இரவு 7:45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது. மே,3ம் தேதி முதல் மே,10ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
***

