/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேட்பாளர் வரவேற்புக்கு ரூ.3,000 கட்டுப்படியாகாமல் கட்சியினர் புலம்பல்

ADDED : ஏப் 11, 2024 12:06 AM
தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரத்திற்கு, வரவேற்பு கொடுக்க, 3,000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதால், பிரசாரத்தின் போது, அக்கட்சி நிர்வாகிகள் கட்டுப்படியாகவில்லை என, புலம்பினர்.
இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் பிரேம்குமார் போட்டியிடுகிறார். தாம்பரம் சட்டசபை தொகுதியில், ஒவ்வொரு பகுதிக்கும் வேட்பாளர் செல்லும் போது, வரவேற்பு கொடுப்பது, பட்டாசு வெடிப்பது, கொடி கம்பம் நடுவதற்கு என, ஒவ்வொரு பகுதி செயலருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவது வழக்கம்.
வேட்பாளருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக அந்த தொகையை, தங்கள் பகுதியில் உள்ள வட்ட செயலர்களுக்கு, அந்தந்த பகுதி செயலர்கள் பிரித்து கொடுத்தனர். தாம்பரம் மத்திய பகுதியில் உள்ள, 12 வட்ட செயலர்களுக்கு, தலா 3,000 ரூபாய் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
அந்த பணத்தை வைத்து, பட்டாசு வெடிப்பதா, வரவேற்பு கொடுப்பதா, கொடிக்கம்பம் நடுவதா என, கட்சி நிர்வாகிகள் திகைத்துப்போயினர். வேறுவழியின்றி கட்சிக்காக தங்களது கை காசு போட்டு, வேட்பாளருக்கு வரவேற்பு கொடுத்து, ஓட்டு சேகரித்தனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.