/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெடுஞ்சாலையில் துளையிட்டு தி.மு.க., கொடி கம்பம் படப்பையில் கட்சியினர் அத்துமீறல்

ADDED : ஏப் 16, 2024 12:14 AM

படப்பை, தி.மு.க., சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் செல்வம், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் டி.ஆர்.பாலுா போட்டியிடுகின்றனர்.
இரு வேட்பாளர்களையும் ஆதரித்து, குன்றத்துார் அருகே படப்பை அடுத்த கரசங்காலில், தி.மு.க., பிரசார கூட்டம் இன்று நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேச உள்ளார்.
இந்த கூட்டத்தில் 50,000 பேர்களை திரட்ட தி.மு.க.,வினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதற்காக பிரசார மேடை, நாற்காலிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.
கூட்டம் நடக்கும் திடல் அருகே, வண்டலுார் - --வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம், ஏராளமான கட்சி கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
இந்த கம்பம் நடுவதற்காக, நெடுஞ்சாலையோரம் இயந்திரத்தின் வாயிலாக துளையிட்டுள்ளனர். தி.மு.க.,வினர் இந்த அத்துமீறிய செயலுக்கு, வாகன ஓட்டிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.