/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டியில் 11 மாடி அலுவலக வளாகம் பணியை துவக்கியது 'பாஷ்யம்' நிறுவனம்
/
கிண்டியில் 11 மாடி அலுவலக வளாகம் பணியை துவக்கியது 'பாஷ்யம்' நிறுவனம்
கிண்டியில் 11 மாடி அலுவலக வளாகம் பணியை துவக்கியது 'பாஷ்யம்' நிறுவனம்
கிண்டியில் 11 மாடி அலுவலக வளாகம் பணியை துவக்கியது 'பாஷ்யம்' நிறுவனம்
ADDED : ஜூன் 13, 2024 11:51 PM

சென்னை, கிண்டி ஹால்டா சந்திப்பில், 12 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட, 11 மாடி அலுவலக வளாகம் கட்டும் பணிகளை, பாஷ்யம் நிறுவனம் துவக்கி உள்ளது.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டுவதில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இயல்பாகவே அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இதில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருகையால், ஐ.டி., பூங்காக்கள் கட்டுவது அதிகரித்தது.
பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆர்., மட்டுமல்லாது, ஜி.எஸ்.டி., சாலை, பல்லாவரம் ரேடியல் சாலை, அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், ஐ.டி., பூங்காக்கள் கட்ட ஆர்வம் காட்டின.
இதற்கு அடுத்தபடியாக, கடந்த சில ஆண்டுகளாக, அலுவலக வளாகங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
தனியார் கட்டுமான நிறுவனங்கள், அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும், அடுக்குமாடி அலுவலக வளாகங்கள் கட்டும் பணிகளில் இறங்கி உள்ளன.
பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற நகரங்களுக்கு இணையாக, சென்னையிலும் அலுவலக வளாக சந்தையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், 26 லட்சம் சதுர அடி அளவுக்கான அலுவலக இடங்கள், வாடகைக்கு பெறப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது, 42 சதவீதம் அதிகம் எனக் கூறப்படுகிறது. பெரிய அளவிலான வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது உள்ளூர், உள்நாட்டு நிறுவனங்களும், அடுக்குமாடி அலுவலக வளாகங்களை பயன்படுத்த துவங்கியுள்ளன.
இதனால், குடியிருப்புகள் கட்டும் நிறுவனங்களும், இதில் ஈடுபடுகின்றன. இந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டி வரும் பாஷ்யம் நிறுவனம், அண்ணா சாலையில் அடுக்குமாடி அலுவலக வளாகம் கட்ட திட்டமிட்டது.
இதற்காக கிண்டி, ஹால்டா சந்திப்பில், 'ஏபிடி' நிறுவனம் செயல்பட்டு வந்த நிலத்தை, பாஷ்யம் நிறுவனம் கடந்த ஆண்டு வாங்கியது.
இங்குள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, தற்போது அடுக்குமாடி அலுவலக வளாகம் கட்டும் பணிகளை, அந்நிறுவனம் துவக்கி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 12 லட்சம் சதுர அடி பரப்பளவில், 11 மாடிகள் கொண்டதாக, இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு திட்ட அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில், அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மேலும், அண்ணா சாலையின் துவக்க பகுதியில் நட்சத்திர ஹோட்டல்கள், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அதிகமாக செயல்படும் இடத்தில் இந்த வளாகம் அமைந்துள்ளதாக, கட்டுமான துறையினர் தெரிவித்து உள்ளனர்.

