நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,மத்திய பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குமார் ராஜரத்தினம் நினைவாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அழைக்கப்படுகிறது.
இவரது மனைவி வழக்கறிஞர் ஹீரா கே.ராஜரத்தினம், 78. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்தராக பணியாற்றிய இவர், சமூக சேவகராகவும் விளங்கினார்.
எழும்பூரில் வசித்து வந்த ஹீரா கே.ராஜரத்தினம், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இவரது மகள் விஜயலட்சுமி வாசுதேவன், மகன் அபுடுகுமார். இவர் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்.
மறைந்த ஹீரா கே.ராஜரத்தினத்தின் இறுதி சடங்குகள், இன்று காலை 10:00 மணிக்கு, சென்னை எழும்பூரில் நடக்கிறது.