தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அண்ணனுார் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி கோரும் பயணியர்

அண்ணனுார் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி கோரும் பயணியர்

அண்ணனுார் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி கோரும் பயணியர்


ADDED : ஆக 27, 2024 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 12:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆவடி, ஆக அண்ணனுார் ரயில் நிலையத்தை தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். கடந்த 2018ல் முதல், ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

அதற்கேற்றவாறு, 1,300 அடி நீளத்துக்கு ரயில் நடைமேடை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரு மார்க்கத்திலும் நிழற்குடை அமைக்கப்படவில்லை. பயணியர் மழையிலும், வெயிலிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், கடந்த 2020ல், அண்ணனுார் - - அயப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் விதமாக, உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டது. இதையடுத்து எல்.சி., கேட் - 7 கடவுப்பாதை மூடப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் மேம்பாலத்தை பயன்படுத்துவதில்லை. ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து வந்தனர்.

இதையடுத்து, விபத்தை தவிர்க்க, அண்ணனுார் ரயில் நிலையம் சுற்றி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, பயணியர் பயன்பாட்டிற்காக, இரண்டு நடைமேடைகளை இணைக்கும் விதமாக, 49 படிகளுடன், 61 அடி உயர நடைமேம்பாலம், கடந்தாண்டு திறக்கப்பட்டது.

நடை மேம்பாலம் உயரமாக இருப்பதால், வயதானோர் உட்பட அனைவரும், ஆபத்தை உணராமல் தடுப்புகள் மீது ஏறி ரயில் நிலையம் செல்கின்றனர்.

எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அண்ணனுார் ரயில் நிலையத்தில், 'லிப்ட்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அண்ணனுார் கடவுப்பாதை, புதர்மண்டி உள்ளது. ரயில் நிலையம் செல்வோர், நடை மேம்பாலத்தை ஏறுவதற்கு தயங்கி, இவ்வழியாகவும் நடந்து செல்கின்றனர்.

இரவு நேரங்களில், கும்மிருட்டாக காட்சி அளிப்பதால், வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

எனவே, இரவு நேரங்களில், ரயில் நிலையம் சுற்றி உள்ள பகுதியில், போலீசார் தினமும், ரோந்து செல்ல வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us