/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விம்கோ ரயில் நிலையத்தில் கூரையின்றி பயணியர் தவிப்பு
/
விம்கோ ரயில் நிலையத்தில் கூரையின்றி பயணியர் தவிப்பு
விம்கோ ரயில் நிலையத்தில் கூரையின்றி பயணியர் தவிப்பு
விம்கோ ரயில் நிலையத்தில் கூரையின்றி பயணியர் தவிப்பு
ADDED : ஏப் 23, 2024 01:09 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையத்தை, தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, எளாவூர், நெல்லுார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மறுமார்க்கமாக, சென்ட்ரல், பீச் ஸ்டேஷன் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்லும் ரயில்கள், இங்கு நின்று செல்வதாலும், மெட்ரோ ரயில் வருகைக்கு பின், விம்கோ நகர் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணியர் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், விம்கோ நகர் ரயில் நிலையத்தில், மின்சார ரயில் வரும் வரை காத்திக்கும் பயணியர் ஒதுங்கி நிற்க, போதுமான நிழற்குடை இல்லை. இருக்கும் நிழற்குடையும் போதுமானதாக இல்லை.
இதன் காரணமாக, மதியம் 11:00 முதல் 3:00 மணி வரை, ரயிலுக்கு காத்திருக்கும் பயணியர் சுட்டெரிக்கும் வெயிலில், தவியாய் தவிக்க நேரிடுகிறது.
ரயில்வே நிர்வாகம் சுதாரித்து, பயணியர் தேவைக்காக, கூடுதலாக கூரை அமைத்து தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

