/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாஸ்போர்ட் இணையதளம் மீண்டும் செயல்பாடு
/
பாஸ்போர்ட் இணையதளம் மீண்டும் செயல்பாடு
ADDED : செப் 03, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பராமரிப்பு பணிகள் முடிந்து, நேற்று முதல் பாஸ்போர்ட் சேவா இணையதள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
ஆக., 29ம் தேதி முதல் செப்., 1 வரை, www.passportindia.gov.in பாஸ்போர்ட் சேவா இணையதளம் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் நடந்தன.
இதனால், பாஸ்போர்ட் வழங்குவது, புதுப்பிப்பது, சந்திப்புகளுக்கான முன்பதிவு வழங்குவது மற்றும் வெளியுறவு துறைகளுடனான சேவைகள் உள்ளிட்டவை நடைபெறவில்லை.
இந்நிலையில், தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் முடிந்து, நேற்று காலை 6:00 மணி முதல், இணையதளம் செயல்பாட்டிற்கு வந்தது.
இப்போது, பாஸ்போர்ட் இணையதளத்தின் விரைவுத்தன்மை முன்பைவிட அதிகமாகி உள்ளது.