/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீனவர்களுக்கு பட்டா மீனவ சங்கம் கோரிக்கை
/
மீனவர்களுக்கு பட்டா மீனவ சங்கம் கோரிக்கை
ADDED : ஆக 05, 2024 12:56 AM
காசிமேடு, மீனவ மக்களுக்கு விரைந்து பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, அனைத்து மீனவர் சங்க தலைவர் நாஞ்சில் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக கடல் பரப்பில், 12 கடல் மைல் தொலைவுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க வலையை போட்டால், மீனுக்கு பதிலாக வெறும் குப்பையும், பிளாஸ்டிக்களும் தான் வருகிறது.
மேலை நாடுகளை போன்று, கடலில் குப்பையை அகற்ற மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
கடலை குப்பை தொட்டியாக மாற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கடலோர காவல் படையில் தமிழக மீனவர்களுக்கு 70 சதவீதம் வேலை அளிக்க முன்வர வேண்டும்.
தமிழகம் முழுதும், மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 பேருக்கு பட்டா வழங்கப்படும் என அறிவித்த நிலையில், விரைந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளுக்கு உயர்ரக, மாசு ஏற்படுத்தாத, மிக குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய டீசலை வழங்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.