/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை ஆக்கிரமிப்பு ஒயிட்ஸ் சாலையில் அவதி
/
நடைபாதை ஆக்கிரமிப்பு ஒயிட்ஸ் சாலையில் அவதி
ADDED : ஏப் 26, 2024 12:26 AM
சென்னை, ஒயிட்ஸ் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான பெட்டிக்கடைகள் செயல்பட்டு வருவதால், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ராயப்பேட்டையில், ஒயிட்ஸ் சாலை உள்ளது. வெஸ்ட் காட் சாலை - பட்டூல்லாஸ் சாலை சந்திப்பு வரை இச்சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து, 10க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் பாதசாரிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட நடைபாதையை, அவர்கள் பயன்படுத்த முடியாமல் சாலையில் நடந்து செல்ல வேண்டி உள்ளது.
அவ்வாறு நடந்து செல்லும் போது, விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சியினரிடம் புகார் அளித்தும், ஆளும்கட்சி ஆதரவுடன் கடைகள் செயல்பட்டு வருவதால், அவற்றை அகற்ற அதிகாரிகள் தயங்குகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து இயங்கும் கடைகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

