/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாம்பார் பார்சலில் பூச்சி ஹோட்டலுக்கு அபராதம்
/
சாம்பார் பார்சலில் பூச்சி ஹோட்டலுக்கு அபராதம்
ADDED : ஆக 28, 2024 12:40 AM
திருமங்கலம், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன் 30; வழக்கறிஞர். இவர், நேற்று காலை திருமங்கலம், 12வது பிரதான சாலையில் உள்ள 'கார்த்திக் டிபன் சென்டர்' என்ற ேஹாட்டலில் இட்லி சாப்பிட்டு வீட்டிற்கும் இட்லி, சாம்பர் பார்சல் வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்தபோது, சாம்பரில் தேனீ போன்ற பூச்சி இருந்ததால் அதிர்ச்சடைந்தார். உடனடியாக, ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருமங்கலம் போலீசில் மோகன் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி ஆய்வு செய்து, மாதிரியை எடுத்து ஹோட்டலுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்தனர். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.