/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குட்கா விற்பனை ரூ.3.75 லட்சம் அபராதம் விதிப்பு
/
குட்கா விற்பனை ரூ.3.75 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : செப் 11, 2024 12:07 AM

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, போதைப்பொருட்கள் எதிராக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அம்பத்துார், சோழவரம், மணலி, பூந்தமல்லி, திருவேற்காடு, எண்ணுார் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், 22 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 14 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் 14 பேருக்கு 3.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 10 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
இதில், இரண்டாவது முறையாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு சிக்கிய பூந்தமல்லியைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.