/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்மாற்றி அருகில் கழிப்பறை பயன்படுத்த மக்கள் அச்சம்
/
மின்மாற்றி அருகில் கழிப்பறை பயன்படுத்த மக்கள் அச்சம்
மின்மாற்றி அருகில் கழிப்பறை பயன்படுத்த மக்கள் அச்சம்
மின்மாற்றி அருகில் கழிப்பறை பயன்படுத்த மக்கள் அச்சம்
ADDED : ஏப் 30, 2024 01:05 AM

கீழ்ப்பாக்கம்,
அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டடில் கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றியுள்ள கல்லறை சாலை, கிளப் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில், சென்னை மாநகராட்சியில் இலவச கழிப்பறைகள் மற்றும் 'இ - டாய்லெட்'கள் உள்ளன.
இவை முறையாக பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
கீழ்ப்பாக்கம், தோட்டச் சாலை முழுதும் ஏராளாமானோர் சாலைகளிலேயே வியாபாரங்கள் செய்து, தெருவோரங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள், இப்பகுதியில் உள்ள மாநகராட்சியின் இலவச கழிப்பறைகளை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது கடந்த ஓராண்டாக, கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி, படுமோசமாக உள்ளன.
தோட்டச் சலையில் உள்ள, 'இ - டாய்லெட்' உயர் அழுத்த மின்மாற்றியின் அருகில் பின்புறத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கழிப்பறையை சுற்றி இரண்டு மின்மாற்றி உள்ளன.
யாரும் பயன்படுத்த முடியாத இடத்தில் இருப்பதால், வீணாகி வருகிறது. இதை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், கல்லறை தெருவில் உள்ள, இ - டாய்லெட் மற்றும் கிறிஸ்துவ கல்லறை தோட்டத்தில் உள்ள இலவச கழிப்பறைகளும் பராமரிப்பின்றி உள்ளன. இதை கவனத்தில் கொண்டு, சாலையோர கழிப்பறைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

