/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் தடையால் வீதிக்கு வந்த மக்கள்
/
மின் தடையால் வீதிக்கு வந்த மக்கள்
ADDED : மே 12, 2024 12:04 AM

சென்னை, சென்னையில் அறிவிக்கப்படாத மின் தடை பல பகுதிகளில் ஏற்படுகிறது.
இரவு நேர மின் தடையால் துாக்கம் தொலைக்கும் மக்கள், மறுநாள் வழக்கமான வேலைகளில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த நிலையில், செம்மஞ்சேரியில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மின் மாற்றி முன் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
மின் தடை ஏற்பட்டால், அந்தந்த துணை மின் நிலையங்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என, மின்வாரியம் அறிவித்து உள்ளது.
ஆனால், அலுவலகத்தில் போன் எடுப்பதில்லை. இளநிலை பொறியாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு போன் செய்தாலும், அவர்கள் எடுப்பதில்லை.
இரவு நேர மின் தடையால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. மின் தடை இல்லாத வகையிலும் அப்படியே ஆனாலும், உரிய பதில் கூறும் வகையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.