/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரவில் தொடரும் மின் தடையால் புழுக்கம் தாளாமல் மக்கள் தவிப்பு இரவில் தொடரும் மின் தடை திருவொற்றியூரில் புழுக்கம்

ADDED : ஆக 11, 2024 01:25 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர், எண்ணுார் சுற்றுவட்டார பகுதிகளில், இரவு வேளைகளில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டால், மக்கள் வீட்டின் மொட்டை மாடி, தெருக்களில் தஞ்சமடைகின்றனர்.
குறிப்பாக, திருவொற்றியூரின் மாணிக்கம் நகர் மற்றும் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகள், மேற்கு பகுதியின் கலைஞர் நகர், அம்பேத்கர் நகர் போன்ற பகுதிகளில், இரவில் தொடர் மின் தடை ஏற்பட்டு வருகின்றன.
இது குறித்து, தகவல் தெரிவிக்க மின்வாரியத்தை தொடர்பு கொண்டால், போனை எடுக்கவே ஆள் கிடையாது. மாறாக, நேரில் சென்று தெரிவித்தாலும் பலனில்லை. இதில், ஜோதி நகர், சாத்தாங்காடு உள்ளிட்ட பல உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அறிவிக்கப்படாத மின் தடையால், குழந்தைகள், நோயாளிகள், முதியோர் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.
மக்கள் மீது, மின் வாரியம் ஏன் இத்தனை அலட்சியமாக செயல்படுகிறது என, அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.