/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபாலில் பெரம்பூர் டான்பாஸ்கோ அபாரம்
/
வாலிபாலில் பெரம்பூர் டான்பாஸ்கோ அபாரம்
ADDED : செப் 06, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மாநிலத்தில் முதல் முறையாக,'பிளேஸ் வாலிபால் லீக்' முதலாவது சீசன் போட்டி, சென்னையில் பல்வேறு பள்ளிகளில் நடக்கிறது.
பெரம்பூரில் நேற்று முன்தினம் நடந்த 13வது லீக் போட்டியில், பெரம்பூர் டான்பாஸ்கோ மற்றும் சாந்தோம் செயின்ட் பீட்ஸ் அணிகள் மோதின.
இதில், 25 - 22, 25 - 33, 25 - 21 என்ற கணக்கில், டான்பாஸ்கோ பள்ளி வெற்றி பெற்றது.
நேற்று நடந்த 14வது லீக் போட்டியில், பெரம்பூர் டான்பாஸ்கோ மற்றும் பிராட்வே செயின்ட் மேரீஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில், 25 - 10, 25 - 21, 25 - 20 என்ற புள்ளிக் கணக்கில், டான்பாஸ்கோ பள்ளி வெற்றி பெற்றது.
போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.