/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
440 பேருக்கு நிரந்தர வீடு ஒதுக்கீடு ஆணை
/
440 பேருக்கு நிரந்தர வீடு ஒதுக்கீடு ஆணை
ADDED : செப் 08, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார், சென்னையின் பல்வேறு பகுதிகளில், நீர்நிலையோரம் வசித்த, 5,000க்கும் மேற்பட்டோர், பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், மறுக்குடியமர்வு செய்யப்பட்டனர்.
அப்போது, 810 பேருக்கு தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 440 பேர், நிரந்தர ஒதுக்கீடு ஆணை பெற தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, செம்மஞ்சேரி வாரிய அலுவலகத்தில் வைத்து, 440 பேருக்கு, சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நிரந்தர வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கினார். இதில், வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.