/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூர் - திருச்சி, கோவைக்கு நேரடி பஸ்கள் சேவை கோரி மனு
/
திருவள்ளூர் - திருச்சி, கோவைக்கு நேரடி பஸ்கள் சேவை கோரி மனு
திருவள்ளூர் - திருச்சி, கோவைக்கு நேரடி பஸ்கள் சேவை கோரி மனு
திருவள்ளூர் - திருச்சி, கோவைக்கு நேரடி பஸ்கள் சேவை கோரி மனு
ADDED : மார் 06, 2025 12:12 AM
சென்னை, திருவள்ளூரில் இருந்து திருச்சி, கோவைக்கு நேரடி பஸ் சேவை துவங்கக்கோரி, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டியிடம், திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை புறநகரில் முக்கிய ரயில் நிலையமாக, திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. தினமும் 1.5 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான விரைவு ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வழி வகை செய்ய வேண்டும்.
அதுபோல், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, திருவள்ளூரில் இருந்து சேலம், திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கோவை, புதுச்சேரிக்கு நேரடி பஸ் சேவை துவங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.