/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
9 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டு பள்ளியை தரம் உயர்த்த மனு
/
9 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டு பள்ளியை தரம் உயர்த்த மனு
9 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டு பள்ளியை தரம் உயர்த்த மனு
9 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டு பள்ளியை தரம் உயர்த்த மனு
ADDED : ஜூன் 16, 2024 12:25 AM

ஆவடி, பட்டாபிராம், மாடர்ன் சிட்டியில் உள்ள ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி துவங்கி 5 நாட்கள் ஜமாபந்தி நடந்தன. இறுதி நாளான நேற்று முன்தினம், வெள்ளானுார் ஊராட்சி தலைவர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தனித்தனியாக மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்ததாவது:
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளானுார் ஊராட்சியில் ஆரிக்கம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இந்த பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த போதுமான இடம் வசதி இல்லை. உயர்கல்விக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதியின்மை காரணமாக, பெண் பிள்ளைகளை மேற்கொண்டு படிக்க வைக்க பெற்றோர் தயங்குவதாக கூறப்படுகிறது.
இதனால், பெரும்பாலான மாணவ - மாணவியர், 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.
இந்த நிலையில், காட்டூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சர்வே எண்: 197/1ல் உள்ள 80 கோடி ரூபாய் மதிப்பிலான 9 ஏக்கர் நிலத்தை, தனபால் என்ற தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்.
மேற்கண்ட நிலத்தில், மேல்நிலைப் பள்ளி கட்ட 2001 - -2006ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆகையால், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து, தனியார் நபரிடமிருந்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு உயர்நிலைப் பள்ளி கட்டடம் கட்டித்தர வேண்டும் என, பொதுமக்கள் மனு அளித்தனர்.

