/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர், தாம்பரம், திருவள்ளூரில் பயணியர் ஓய்வறை திறக்க திட்டம்
/
எழும்பூர், தாம்பரம், திருவள்ளூரில் பயணியர் ஓய்வறை திறக்க திட்டம்
எழும்பூர், தாம்பரம், திருவள்ளூரில் பயணியர் ஓய்வறை திறக்க திட்டம்
எழும்பூர், தாம்பரம், திருவள்ளூரில் பயணியர் ஓய்வறை திறக்க திட்டம்
ADDED : மார் 08, 2025 12:35 AM
சென்னை, சென்னை சென்ட்ரல், திருச்சி, மதுரை, கோவை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில், பயணியர் வசதிக்காக, ஓய்வு அறைகள் உள்ளன.
இந்நிலையில், இரண்டாம் நிலை ரயில் நிலையங்களிலும் இந்த வசதியை தனியார் பங்களிப்போடு விரிவுப்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
முக்கிய ரயில் நிலையங்களில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, பயணியர் ஓய்வு அறைகளை திறந்து வருகிறோம்.
மூன்று மணி நேரம் முதல், அதிகபட்சமாக 48 மணி நேரம் வரை தங்க முடியும். குறைந்தபட்சமாக 25 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படும். ரயில் பயணியருக்கு மட்டுமே, இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்நிலையில், பயணியர் வருகை அதிகமாக உள்ள இரண்டாம் கட்ட ரயில் நிலையங்களில் இந்த வசதியை விரிவுப்படுத்த உள்ளோம்.
அதன்படி, சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உட்பட 10 ரயில் நிலையங்களில், இந்த வசதியை விரிவுப்படுத்த 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் நிறுவனம் தேர்வு செய்து, இந்த வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.