/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்யாண வரதராஜர் கோவிலில் பிரம்மோற்சவ பந்தக்கால் நடவு
/
கல்யாண வரதராஜர் கோவிலில் பிரம்மோற்சவ பந்தக்கால் நடவு
கல்யாண வரதராஜர் கோவிலில் பிரம்மோற்சவ பந்தக்கால் நடவு
கல்யாண வரதராஜர் கோவிலில் பிரம்மோற்சவ பந்தக்கால் நடவு
ADDED : மே 03, 2024 11:50 PM

திருவொற்றியூர், திருவொற்றியூர் - காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், 2006ல் ராஜகோபுர பணிகள் துவங்கின.
பல்வேறு காரணங்களால் பணிகள் முடியாததால், திருவிழா, பிரம்மோற்சவம், புறப்பாடுகள் ஏதும் நடக்கவில்லை. 2023ல் திருப்பணிகள் முடிந்து, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பிரம்மோற்சவங்கள், புறப்பாடுகள் நடந்து வருகின்றன.
அந்த வரிசையில், வரும் 20ம் தேதி, கொடி யேற்றத்துடத்துடன் துவங்கும் வைகாசி பிரம்மோற்சவம், 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதையொட்டி, கோவில் ராஜகோபுரம் முன், பந்தக்கால் நடும் வைபவம், நேற்று காலை நடந்தது. 35 அடி உயர பந்தக்காலிற்கு, பால், தயிர், மஞ்சள் நீர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட மங்கல பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. பின், 3 அடி குழியில், நவதானியமிட்டு பந்தக்கால் நடப்பட்டது.
காஞ்சிபுரம், மீஞ்சூருக்கு அடுத்தப்படியாக, வெகு விமரிசையாக இங்கு கருடசேவை நடக்கும். அன்றைய தினமான வரும் 22ல் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 17 ஆண்டுகளுக்கு பின் இந்த வைபவம் நடப்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்க முடிகிறது.