/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீச்சல் பயிற்சி குளத்துடன் விளையாட்டு மைதானம்
/
நீச்சல் பயிற்சி குளத்துடன் விளையாட்டு மைதானம்
ADDED : மார் 06, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரப்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான, 7 ஏக்கர் இடம் உள்ளது.
இதில், நீச்சல் குளத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, ஓ.எம்.ஆர்., பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீச்சல் பயிற்சி குளம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, 3 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.