/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உயர்மின் அழுத்த வடம் அறுந்து விழுந்து பிளம்பர் பலி
/
உயர்மின் அழுத்த வடம் அறுந்து விழுந்து பிளம்பர் பலி
உயர்மின் அழுத்த வடம் அறுந்து விழுந்து பிளம்பர் பலி
உயர்மின் அழுத்த வடம் அறுந்து விழுந்து பிளம்பர் பலி
ADDED : ஜூன் 04, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை,
உயர் மின் அழுத்த மின்வடம் அறுந்து விழுந்ததில், பிளம்பர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார். சென்னை, மேடவாக்கம், ஜல்லடியான்பேட்டை, பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு, 46, பிளம்பர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுநீர் கழிக்க வீட்டிற்கு வெளியே வந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரகுவின் உடலை கைப்பற்றி, பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறுந்து விழுந்த மின் கம்பி சீரமைப்பு பணியை, மின்வாரியத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.