தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பிளஸ் 2 மாணவர் விபத்தில் உயிரிழப்பு

பிளஸ் 2 மாணவர் விபத்தில் உயிரிழப்பு

பிளஸ் 2 மாணவர் விபத்தில் உயிரிழப்பு


ADDED : ஜூலை 27, 2024 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 12:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடபழநி, நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சுகநேஷ்வர், 17; பிளஸ் 2 மாணவர். இவர், நேற்று முன்தினம் இரவு, வடபழநியில் உள்ள நண்பர் நித்திஷின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, தாயின் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் சென்றார்.

வடபழநி மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றபோது, முன்னால் சென்ற ரெடிமிக்ஸ் லாரியில், ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த மாணவனை, அவ்வழியாக காரில் சென்ற ஜாபர் சாதிக் என்பவர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது. விபத்து குறித்து, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us