/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியிடம் சில்மிஷம் மாணவனுக்கு 'போக்சோ'
/
சிறுமியிடம் சில்மிஷம் மாணவனுக்கு 'போக்சோ'
ADDED : மார் 04, 2025 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருவான்மியூரை சேர்ந்தவர் 5வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த, 18 வயதுள்ள கல்லுாரி மாணவன், சிறுமியை துாக்கி, மடியில் அமர வைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதை, பெற்றோரிடம் சிறுமி கூறினார்.
பெற்றோர் அளித்த புகாரில், திருவான்மியூர் மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரித்தனர். இதில், மாணவன் சில்மிஷம் செய்தது உறுதியானதால், போலீசார் போக்சோ சட்டத்தில் மாணவனை கைது செய்தனர்.